கேரளாவில் விஜய் – ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி நொறுங்கிய கார்!

0
39
Article Top Ad

நடிகர் விஜய் 14 வருடங்களுக்கு பிறகு இன்று கேரளாவுக்கு சென்று இருக்கிறார். அவர் நடிக்கும் GOAT படத்தின் ஷூட்டிங் அங்கு நடக்க உள்ள நிலையில் விஜய் அங்கு விமானத்தில் சென்று சேர்ந்து இருக்கிறார்.

விமான நிலையத்தில் விஜய்யை வரவேற்க பல ஆயிரம் ரசிகர்கள் கூடி இருந்தனர். விஜய்யை நேரில் பார்த்துவிட வேண்டும் என்கிற ஆசையில் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் கூடி இருந்தது.

விஜய் ஏர்போர்ட்டில் இருந்து புறப்பட்ட கார் ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்து தான் ஹோட்டல் வரை சென்று சேர்ந்தது.

ரசிகர்கள் காரை சூழ்ந்து வந்து நெருக்கியத்தில் கண்ணாடி உடைந்து நொறுங்கி இருக்கிறது. அந்த காரின் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.

https://x.com/KVFC_Official/status/1769730802244370941?s=20https://x.com/KVFC_Official/status/1769730802244370941?s=20