பிரித்தானியாவில் அரைக்கம்பத்தில் பறந்த தேசிய கொடியால் பரபரப்பு: இளவரசி கேட் உயிரிழப்பா?

0
13
Article Top Ad

பிரித்தானியாவின் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறப்பது போன்ற புகைப்படமும் பிரித்தானிய இளவரசியின் புகைப்படத்தையும் தொடர்புபடுத்தி வெளியான செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அண்மைய நாட்களாக பிரித்தானிய இளவரசி தொடர்பில் பல சர்ச்சை கருத்துக்கள் பரவி வந்த நிலையில், தற்பேது தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறப்பது போன்ற புகைப்படம் வெளியாகி மேலும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இளவரசர் சார்லஸ், மன்னரானதைத் தொடர்ந்து, இளவரசர் வில்லியமுக்கு வேல்ஸ் இளவரசர் என்னும் பட்டம் கொடுக்கப்பட்டது. ஆகவே, இளவரசி கேட், வேல்ஸ் இளவரசியானார்.

இளவரசி கேட், குறித்த பாதுகாவலர்களின் Colonel of the regiment என்னும் பொறுப்பை வகிக்கிறார்.

நேற்று St Patrick’s Day தினத்தையொட்டி, Irish Guards என்னும் பாதுகாவலர்களின் அணிவகுப்பு நடந்தது. அதில் இளவரசி கேட் கலந்துகொள்ளவில்லை.

எனினும் அவர் இல்லாத நிலையிலும், வீரர்கள் அவருக்கு மரியாதை செலுத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறந்ததையும் இளவரசி அணிவகுப்பில் கலந்துகொள்ளாததையும் சிலர் இணைத்து, இளவரசி கேட் இறந்துவிட்டார். அதனால் தான் பிரித்தானிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கின்றது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என சமூகவலைத்தளத்தில் செய்திகளைப் பகிர்ந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், எக்ஸின் Fact check குழுவினர் அரைக்கம்பத்தில் பறக்கும் கொடி குறித்த உண்மையை ஆராய்ந்தபோது, அது மகாராணி இரண்டாம் எலிசபெத் மரணமடைந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.