மெக்டொனால்டு நிறுவனம் இலங்கையில் உள்ளூர் பங்குதாரருடன் செய்து கொண்ட உடன்படிக்கையை முடிவுக்குகொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் புதிய உரிமையாளருடன் விரைவில் இலங்கையில் சேவைகளை முன்னெடுக்க முடியும் என அமெரிக்காவில் உள்ள தாய் நிறுவனம் அறிவித்துள்ளது.
மெக்டொனால்டு இலங்கையில் உள்ள அதன் உள்ளூர் பங்குதாரருடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டதுடன், நாட்டில் உள்ள அனைத்து 12 விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக மெக்டொனால்டு நிறுவனத்தின் தாய் நிறுவனம் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி சனத் விஜேவர்தன கூறியுள்ளார்.
“நிலையான சிக்கல்கள் காரணமாக உரிமையாளருடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள தாய் நிறுவனம் முடிவு செய்தது. இந்நிலையில், புதிய பங்குதாரருடன் மீள திரும்புவதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம்” என சட்டத்தரணி கூறியுள்ளார்.
புதன்கிழமை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகவும், ஆனால் விற்பனை நிலையங்கள் சில நாட்களாக தொடர்ந்து இயங்கியதாகவும் அவர் கூறினார்.