பிலிப்பைன்ஸ் – சீனா இடையே முறுகல் ; தென் சீனக் கடலில் பதற்றம்

0
12
Article Top Ad

பிலிப்பைன்ஸில் உள்ள சீனத் தூதரகத்தின் பொறுப்பாளர்களை வரவழைத்து, தென் சீனக் கடலில் சீன கடலோரக் காவல்படையின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

பிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சகம் சீன வெளியுறவு அமைச்சகத்திடம் முறைப்பாடு அளிக்க பெய்ஜிங்கில் உள்ள அதன் பணியகத்துக்கும் உத்தரவிட்டுள்ளது.

தென் சீனக் கடலில் இரண்டாவது தாமஸ் ஷோலில் இருக்க சீன கடலோர காவல்படைக்கு உரிமை இல்லை என்று பிலிப்பைன்ஸ் அமைச்சகம் கூறியுள்ளது.

சர்வதேச சட்டத்தின் கீழ் நடுவர் செய்யக்கூடாது?

பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு அமைச்சர் கில்பெர்டோ தியோடோரோ, தென் சீனக் கடலில் அதன் ‘இறையாண்மை’ விடயத்தை சர்வதேச நடுவர் மன்றத்திற்கு கொண்டு செல்லுமாறு சீனாவுக்கு வெளிப்படையாக ஏற்கனவே சவாலும் விடுத்திருந்தார்.

அதே நேரத்தில் மணிலா அதன் நிலைப்பாட்டில் இருந்து விலகாது என அவர் சீனாவுக்கு அறிவுறுத்தியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தகது.

“சீனா தனது உரிமைகோரலை உலகிற்கு தெரிவிக்க பயப்படாவிட்டால், நாம் ஏன் சர்வதேச சட்டத்தின் கீழ் நடுவர் செய்யக்கூடாது?” என்று கில்பர்டோ கேள்வியெழுப்பியுள்ளார்.

இரண்டாவது தாமஸ் ஷோல் நோக்கிச் சென்று கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் குடிமக்கள் படகு மீது நீர் பீரங்கி மூலம் சீன கடலோர காவல் படையின் கப்பல் நடத்திய தாக்குதலை அடுத்தே இந்த பகுதியில் தொடர்ந்து பதற்றமான நிலைமை காணப்படுகிறது.

இரண்டாவது தாமஸ் ஷோல் சீன கட்டுப்பாட்டில்

இச்சம்பவத்தில் படகு கணிசமான அளவில் சேதமடைந்ததுடன், பணியாளர்களும் காயமடைந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இன்று திங்கட்கிழமை உயர்மட்டக் கூட்டமொன்றை நடத்தியதுடன், எதிர்கால நடவடிக்கை குறித்து விவாதிக்கவும், ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியருக்கு பரிந்துரைகளை வழங்கவும் தீர்மானித்துள்ளார்.

தென் சீனக் கடலை முழுவதுமாக தனது பகுதி என்று சீனா உரிமை கோருகிறது. மேலும் பிலிப்பைன்ஸின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் (EEZ) அமைந்துள்ள இரண்டாவது தாமஸ் ஷோல் தனது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் சீனா கூறுகிறது.

உலகில் வேறு எந்த நாடும் இதனை ஆதரிக்கவில்லை என்பதுடன், சீன கடலோர காவல்படை பல ரோந்து கப்பல்களையும் அப்பகுதியில் நிறுத்தியுள்ளது.

2016 ஆம் ஆண்டு நிரந்தர நடுவர் நீதிமன்றம் சீனாவின் பரந்த கோரிக்கைக்கு சர்வதேச சட்டத்தின் கீழ் எந்த அடிப்படையும் இல்லை தெளிவுபடுத்தி இருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்து.