நிரந்தர வதிவிடக் கட்டணத்தை உயர்த்த கனடா முடிவு

0
22
Article Top Ad

கனடாவில் நிரந்தர வதிவிடக் கட்டணத்தை இம்மாத இறுதியுடன் 12 வீதத்தால் அதிகரிக்க அந்நாட்டு அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.

இதன்படி, ஏப்ரல் 30ஆம் திகதி முதல், பணவீக்க விகிதங்களுக்கு ஏற்ப நிரந்தர குடியிருப்புக் கட்டணம் 515 கனேடிய டொலரில் இருந்து 575 டொலர்களாக அதிகரிப்பதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ளது.

மேலும், Federal Skilled Worker Program and Provincial Nominee Program உட்பட பல்வேறு நிரந்தர வதிவிட குடியேற்ற திட்டங்களுக்கான கட்டணங்களும் 850 கனேடிய டொலரில் இருந்து 950 டொலர்களாக அதிகரிக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும், இக்கட்டமானது குழந்தைகளுக்கு விலக்கு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் நிரந்தர வதிவிடமானது அமெரிக்க கிரீன் கார்டைப் பெறுவதைப் போன்றது என்பதுடன், அங்கு குடியுரிமை பெற்றுக்கொள்வதற்கான பாதையாகவும் அமைகின்றது.

அண்மையில் பேசிய கனடா பிரதர் ஜஸ்டின் ட்ரூடோ, தமது நாட்டிற்குள் வரும் தற்காலிக குடியேற்றவாசிகளினால் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

மேலும், திறனை தாண்டி அதிகளவான தற்காலிக குடியேற்றவாசிகள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே நிரந்தர வதிவிடக் கட்டணத்தை இம்மாத இறுதியுடன் 12 வீதத்தால் அதிகரிக்க அந்நாட்டு கனடா அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.

இந்த கட்டண அதிகாரிப்பானது நிரந்தர் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்கள் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவிற்கு குடியேற்றத்தின் முதன்மை ஆதாரமாக இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. 2022 ஆம் ஆண்டில் 118,000 இந்தியர்கள் ‘நிரந்தர குடியிருப்பாளர்’ (PR) அந்தஸ்தைப் பெற்றுள்ளனர்

இது வழங்கப்பட்ட மொத்த ‘நிரந்தர குடியிருப்பாளர்களில்’ 27 வீதம் ஆகும் என்று இந்திய அரசாங்க இணையதளம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், அடுத்த மூன்று ஆண்டுகளில், தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை கனடாவின் மக்கள் தொகையில் ஐந்து வீதமாக குறைப்பதை அரசாங்கம் இலக்காக கொண்டுள்ளது.

எனினும், நிரந்தர குடியிருப்பாளர்களை, 2025 மற்றும் 2026 ஆகிய இரண்டிலும் 500,000 ஆக அதிகரிக்க கனடா அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.