ருவாண்டாவை போன்று புலிகளும் தமிழ் இன அழிப்பை தடுத்திருப்பார்கள்: சர்வதேச சமூகமே கைவிட்டது

0
13
Article Top Ad

சர்வதேச சக்திகள் தலையிடாமல் இருந்திருந்தால் ருவாண்டா விடுதலை முன்னணி போன்று தமிழீழ விடுதலைப் புலிகளும் இலங்கையில் தமிழ் இனவழிப்பை தடுத்தியிருப்பார்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமரன் தெரிவித்துள்ளார்.

”கொடூரமான ருவாண்டா இனவழிப்பின் 30ஆவது ஆண்டு நினைவு அனுஷ்டிக்கப்படுகிறது. 1994ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் திகதியிலிருந்து 1994ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் திகதி வரையில் 800,0000க்கும் மேற்பட்ட Tutsi இன மக்களையும், மிதவாத Hutu இனமக்களையும், Hutu பெரும்பான்மையினம் கொன்றொழித்திருந்தது.

ருவாண்டா இன அழிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில், இவ் இன அழிப்பை சர்வதேச சமூகமானது குறிப்பாக பலம் வாய்ந்த சர்வதேச சக்திகள் கவனத்தில் எடுக்கவில்லை. மேலும், படுகொலை இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் நடைபெற்றுக் கொண்டிருப்பது இனவழிப்பென ஏற்றுக் கொள்ள சர்வதேச சக்திகள் மறுத்திருந்தன.

இனவழிப்புக் குற்றமென ஏற்றுக் கொள்ளவில்லை

100 நாள்களுக்குப் பின்னரே ருவாண்டாவில் நடைபெற்றுக் கொண்டிருப்பது “இனவழிப்பு நடவடிக்கை” என அமெரிக்கா குறிப்பிட்டிருந்தபோதும் இந்நடவடிக்கைகள் இனவழிப்புக் குற்றத்தில் உள்ளடங்குபவை என கூறத் தயாராக இருக்கவில்லை.

இது திடர்பாக அமெரிக்காவின் இயலாமை குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது எத்தனை “இனவழிப்பு நடவடிக்கைகள்” இனவழிப்பாகும் என பிரபலமான குறிப்பிடத்தக்க கேள்வியை ஒரு ஊடகவியலாளர் வினவியிருந்தார்.

1994ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் திகதி வரை அந் நேரத்தில் அமெரிக்க இராஜாங்கச்செயலாளராகவிருந்த Warren Christopher, ருவாண்டாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் படுகொலை, இனவழிப்புக் குற்றமென ஏற்றுக் கொள்ளவில்லை.

ருவண்டா தேசிய முண்ணனியே இனவழிப்பை நிறுத்தியது

படுகொலையை இனவழிப்பென சர்வதேச சக்திகள் எற்க தயங்குவதற்கு காரணம் நடைபெற்றுக் கொண்டிருப்பது இனப்படுகொலையென அங்கீகரித்தால் அதனைத் தடுக்க வேண்டிய சட்டக் கடப்பாடு இருப்பதே ஆகும்.

அந் நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படையின் தலைவராகவிருந்த கொபி அனான் (Kofi Annan) ருவாண்டா இனப்படுகொலையை தடுக்கத்தவறியமைக்கு காரணம் அதனைப்பற்றி மேற்குலக நாடுகள் அறியாமல் இதுந்தது என்பதல்ல, மாறாக
மேற்குல நாடுகளின் அரசியல் நிலைப்பாடுகளே காரணமாகும்.

ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது சர்வதேச சக்திகளோ ருவாண்டா இனவழிப்பை நிறுத்தவில்லை. ருவாண்டா மக்களின் விடுதலை இயக்கமான ருவண்டா தேசிய முண்ணனியே(Rwandan Patriotic Front) அவ் இனவழிப்பை நிறுத்தியது.

தமிழ் இனவழிப்பிற்கு அச் சக்திகளும் உடந்தையாக இருத்தன

இச் சந்தர்ப்பத்தில் தமிழினப்படுகொலைக்கு உள்ளான ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்க்கால் இனவ்ழிப்பை, ருவாண்டா இனப்படுகொலையுடன் ஒப்பிடுவது தவிர்க்க முடியாதது.

ருவாண்டா இனவழிப்பை தடுத்து நிறுத்தாதது போன்று தமிழ் இனவழிப்பையையும் தடுத்து நிறுத்தாமைக்குக் காரணம் தமிழினப்படுகொலையை அவர்கள் அறியாமல் இருந்தது என்பது அல்ல மாறாக அந் நாடுகளின் அரசியல் நிலைப்பாடே காரணம் ஆகும்.

இவங்கை தனது தமிழ் இனவழிப்பிற்கு “பயங்கரவாதத்திற்கு எதிரான போர் “ என முலாம் பூசியபோது சர்வதேச சக்திகள் இந்தப் பொய்யை ஏற்றுக் கொண்டதுடன், இலங்கையின் தமிழ் இனவழிப்பிற்கு ஆயுதங்களையும் வழங்கியது. சர்வதேச சக்திகளின் இந் நடவடிக்கை தமிழ் இனவழிப்பிற்கு அச் சக்திகளும் உடந்தையாக இருத்தன.

சர்வதேச சக்திகள் தலையிடாமல் இருந்திருந்தால் ருவாண்டா தேசிய விடுதலை முன்னணி போன்று, தமிழீழ விடுதலைப் புலிகளும், சிறிலங்காவின் தமிழ் இனவழிப்பை தடுத்து நிறுத்தியிருப்பார்கள்.” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here