அவுஸ்ரேலியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு: நாடு முமுவதும் வெடிக்கும் பாரிய போராட்டங்கள்

0
11
Article Top Ad

அவுஸ்திரேலியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒரு “தொற்றுநோய்” என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

சிட்னி மற்றும் பிற முக்கிய அவுஸ்திரேலிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணிகளில் பாலின வன்முறைக்கு கடுமையான சட்டங்களை வலியுறுத்திதுடன், தொடர்ந்து பாரிய போராட்டங்கள் சிட்னியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

2024ஆம் ஆண்டில் நான்கு நாட்களுக்கு ஒரு பெண் கொல்லப்படுவதாக அரசாங்கத்தின் தரவுகள் கூறுகின்றன.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாலேயே இவ்வாறு அவுஸ்ரேலியாவில் எதிர்ப்பு பேரணிகள் வலுப்பெறுள்ளன.

சிட்னியில் ஐந்து பெண்கள் உட்பட ஆறு பேர் இந்த மாதம் கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிவர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகராக உள்ள சிட்னியில் பெண்களின் பாதுகாப்புக்கு வலுவான குற்றவியல் சட்டங்களைக் கோரும் ஆர்ப்பாட்டக்காரர்கள், நகர வீதிகளையும் மூடிய போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

சில எதிர்ப்பாளர்கள் ” பெண்களுக்கு மரியாதை வேண்டும்” மற்றும் “இனி வன்முறைகள் இல்லை” என்று எழுதப்பட்ட பலகைகளை ஏந்தியிருந்தி போராடுகின்றனர்.

தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரான அடிலெய்டில் நகரின் நாடாளுமன்ற கட்டிடத்தில் சுமார் 3,000 பேர் திரண்டு பாரிய போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

இந்த நிலையிலேயே பெண்களுக்கு எதிரான வன்முறை ஒரு “தொற்றுநோய்” எனக் கூறும் பிரதமர் அந்தோனி அல்பானீஸ், இன்று ஞாயிற்றுக்கிழமை தலைநகர் கான்பெராவில் நடைபெறும் பேரணியில் பங்கேற்பதாக தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆஸ்திரேலியாவின் மாநிலத் தலைநகரங்களான மெல்போர்ன், விக்டோரியா, ஹோபார்ட், டாஸ்மேனியா, பிரிஸ்பேன், குயின்ஸ்லாந்து மற்றும் பெர்த்தில் வார இறுதி முழுவதும் இதேபோன்ற போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

26 மில்லியன் மக்கள் வசிக்கும் ஆஸ்திரேலியாவில் பாலின அடிப்படையிலான வன்முறை ஒரு தொடர் பிரச்சினையாக உள்ளது.

2021 ஆம் ஆண்டில், நாட்டின் மிக உயர்ந்த அரசியல் அலுவலகங்கள் சிலவற்றில் பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் தவறான நடத்தை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.