சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு: அதிருப்தியில் ஐரோப்பிய நகரங்கள்

0
24
Article Top Ad

ஐரோப்பிய நாடுகள் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அண்மை ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

அதனால் ஐரோப்பாவின் சில நகரங்கள் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்து வருகின்றன.

ஆம்ஸ்டர்டாம், வெனிஸ் போன்ற நகரங்கள் பெரிய அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவதை தவிர்க்கும் விதமாக ஏப்ரல் 25ஆம் திகதி முதல் சில கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன.

2022ஆம் ஆண்டு 50,000 மக்கள் வாழும் வெனிஸ் நகருக்கு 3.2 மில்லியன் சுற்றுப்பயணிகள் சென்றனர்.

அதனால் ஏப்ரல் 25ஆம் திகதி முதல் வெனிஸ் நகருக்குள் வரும் தனிநபருக்கு நாள் ஒன்றுக்கு 5 யூரோ கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அந்நகரில் இரவு நேரம் தங்க வேண்டும் என்றால் கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டும்.

ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டமாக இருக்கும் ஆம்ஸ்டர்டாம் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 20 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.

2023ஆம் ஆண்டு முதல் அந்நகரம் சில புதிய விதிமுறைகளை அறிவித்தது. அதிக அளவில் குடிப்பதற்காக ஆம்ஸ்டர்டாம் வர வேண்டாம் என்று சுற்றுப்பயணிகளை கேட்டுக்கொண்டது. மேலும் புதிய ஹோட்டல்களுக்கு இனி அனுமதி இல்லை என்றும் அறிவித்தது.

ஐந்து ஆண்டுகளில் சொகுசு கப்பல்களின் எண்ணிக்கையையும் அது பாதியாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.

குரோசியாவும் அதிக சுற்றுலாப் பயணிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. டப்ரோவ்னிக் நகரில் நடக்கக் கூட இடம் இல்லாத அளவுக்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

அதனால் அந்நகருக்கு நாள் ஒன்றுக்கு இரு சுற்றுலா கப்பல்கள் மட்டும் தான் வர அனுமதி. அவற்றில் 4,000 பயணிகளுக்கு மேல் இருக்கக்கூடாது.

சுற்றுலாப் பயணிகளுக்கு தங்களது வீடுகளை ஹோட்டலாக வழங்கும் போக்கு ஸ்பெயினில் உள்ள பார்சலோனா நகரத்தில் அதிகரித்துள்ளது. இதனால் உள்ளூர்வாசிகள் வாடகைக்கு வீடுகள் கிடைக்காமல் திண்டாடுகின்றனர்.

சில ஐரோப்பிய நகரங்களில் சுற்றுலாப் பயணிகளின் குழுவில் 20க்கும் மேற்பட்டவர்கள் இருக்கக்கூடாது, வழிகாட்டிகள் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here