டி20 உலகக் கிண்ணம்: இந்திய அணி அறிவிப்பு

0
41
Article Top Ad

ஜூன் மாதம் இடம்பெறவுள்ள T20 உலகக் கிண்ண தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் அகர்கர் தலைமையிலான தெரிவுக் குழு இந்திய அணியின் இறுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் அணியில் இணைத்துக்கொள்ளப்படவில்லை.

அதேசமயம் அணியின் துணை தலைவராக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டுள்ளார்.

கார் விபத்தில் சிக்கிய நிலையில், பல மாதங்களாக சர்வதேச போட்டிகளில் விளையாடாத ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் நட்சத்திர வீரர் விராட் கோலி விளையாடுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி ரோஹித் சர்மா தலைமையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (WK), சஞ்சு சாம்சன் (WK), ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங் , ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.