அமைச்சுப் பதவியை இழந்த நஸீர் வடமேல் ஆளுநராகப் பதவியேற்பு –  தென் மாகாண ஆளுநராக லக்‌ஷ்மன் நியமனம்

0
169
Article Top Ad

தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

அதற்கமைய தென் மாகாணத்தின் புதிய ஆளுநராக லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தனவும், வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹாபீஸ் நஸீர் அஹமட்டும் இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ஜனாதிபதியின் செயலாளார் சமன் ஏக்கநாயக்கவும் இதன்போது கலந்துகொண்டிருந்தார்.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சராகப் பதவி வகித்த ஹாபீஸ் நஸீர் அஹமட், இந்த அரசில் சுற்றாடல் அமைச்சராக இருந்தார். எனினும், உயர்நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் அவர் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்ததால் அமைச்சுப் பதவியும் இல்லாமல்போனது.