கப்பலுடன் சிறைப்பிடிக்கப்பட்ட 16 இந்திய மீனவர்கள் : அனைவரும் விடுவிக்கப்பட்டதாக ஈரான் அறிவிப்பு

0
54
Article Top Ad

ஓமன் வளைகுடா அகில் ஹார்முஸ் ஜலசந்தியை ஒட்டிய பகுதியில் எம்.எஸ்.சி. ஏரீஸ் என்ற சரக்கு கப்பலுடன் சிறைப்பிடிக்கப்பட்ட அனைத்து இந்தியர்களும் விடுக்கப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 13 ஆம் திகதி சிறைப்பிடிக்கப்பட்ட அந்த கப்பலில் 17 இந்தியர்கள் உட்பட 25 பணியாளர்கள் இருந்த நிலையில் அவர்களை மீட்பதற்கு இந்திய அரசாங்கம் ஈரானுடன் பேச்சு வார்த்தை நடாத்தி வந்தது.

இதனிடையே முன்னதாக ஒருவர் மாத்திரம் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் சுமார் 20 நாட்களுக்கு பிறகு 16 இந்திய பணியாளர்கள் உட்பட கப்பலிருந்த 24 பேரையும் ஈரான் விடுவித்துள்ளது.

இஸ்ரேலுக்குத் தொடர்புடையதாக கடந்த மாதம் சிறைபிடிக்கப்பட்ட எம்.எஸ்.சி. ஏரீஸ் சரக்குக் கப்பலில் பணிபுரிந்த அனைத்து பணியாளர்களும் விடுவிக்கப்பட்டதாக ஈரான் வெளியுறவுத் துறை மந்திரி ஹூசைன் அமிராபக்துல்லா ஹியன் தெரிவித்துள்ளார்.

பணியாளர்களின் விடுவிப்பானது ஈரானின் மனிதாபிமான நடவடிக்கை என தெரிவித்த அவர் கப்பல் ஈரானின் பாதுகாப்பில் இருக்கும் என அறிவித்துள்ளார்.