ரணில், பசில் தரப்பை இந்தியாவுக்கு அழைக்கும் மோடி

0
11
Article Top Ad

இந்தியாவில் மக்களவை (லோக்சபா) தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான கூட்டணி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுவதாக இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி ஆரம்பமான மக்களை தேர்தல் பல கட்டங்களாக ஜுன் 01ஆம் திகதிவரை நடைபெற உள்ளது.

இத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வகுத்துள்ள தேர்தல் வியூகங்கள் அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளதாக சில கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

400 மக்களவைத் தொகுதிகளில் பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ள பின்புலத்தில், தமது தேர்தல் பிரச்சார உத்திகள் தொடர்பில் விளக்களிக்க ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் (SLPP) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பாரதிய ஜனதாக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

அயல்நாட்டுத் தலைவர்களுக்கு தமது கட்சியின் தேர்தல் பிரச்சாரம் பற்றிய விழிப்புணர் வழங்கப்படும் என்றும், எமது உத்திகள் மற்றும் ஒட்டுமொத்த தேர்தல் செயல்முறைகள் குறித்தும் விளக்கமளிக்கவே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாஜக ‘தி இந்து’ க்கு தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் Liberal Party, வியட்நாமின் Communist Party of Vietnam, பங்கதேஷின் Awami League, இஸ்ரேலின் Likud Party, உகாண்டாவின் National Resistance Movement, தான்சானியாவின் Chama Cha Mapinduzi மற்றும் ரஷ்யாவின் United Russia Party ஆகிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இந்தியா வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேலும் பல நாடுகளின் கட்சிகளுக்கு பாஜக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் இந்த அழைப்பு குறித்து பரிசீலித்துவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிவின் தரப்பும் மற்றும் பொதுஜன பெரமுனவின் நிறுவுனரான பசில் ராஜபக்சவின் தரப்பும் தமது பிரதிநிதிகளை இந்தியா அனுப்புவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

இவ்வாண்டு இறுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியின் செல்வாக்கைவிட எதிர்க்கட்சிகளின் செல்வாக்வே அதிகமாக உள்ளது. அதன் காரணமாக இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதிய தேர்தல் வியூகங்களை வகுக்க ஐ.தே.கவும் பொதுஜன பெரமுனவும் உத்தேசித்தள்ளதாகவும் அறிய முடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here