உள்ளூராட்சி தேர்தல் தோல்வி: பிரித்தானியாவில் ஆளும் கட்சி மீது கடும் அழுத்தம்

0
16
Article Top Ad

பிரித்தானியாவில் உள்ளூராட்சி இடைத்தேர்தல் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான ஆளும் கன்சர்வேடிவ் கட்சி கடும் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 40 ஆண்டுகளில் அதன் மோசமான கருத்துக்கணிப்பு முடிவுகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றிகளை பதிவுசெய்துள்ள நிலையில், அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் பிரதமர் சுனக்கை விமர்சித்து வருகின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் இந்த தேர்தல் முடிவை பாராட்டியுள்ளார். அத்துடன் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கும் களம் அமைத்துள்ளார்.

பிளாக்பூல் தெற்கு இடைத்தேர்தலில் டோரி பெரும்பான்மையை முறியடித்த தொழிற்கட்சி வெற்றியை பதிவுசெய்துள்ளது.

“பிளாக்பூல் தேர்தல் முடிவும் முழு நாட்டிற்கானது. இது மாற்றத்திற்கான நேரம் என குறிப்பிட்டுள்ள கெய்ர் ஸ்டார்மர், இதுவொரு பொதுத் தேர்தலுக்கான நேரம்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிளாக்பூல் தெற்கில் தொழிற்கட்சி வேட்பாளர் கிறிஸ் வெப், கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளர் டேவிட் ஜோன்ஸை தோற்கடித்துள்ளார்.

இதேவேளை, தேர்தல் முடிவுகளில் பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here