அணு ஆயுத பயிற்சிக்கு புடின் உத்தரவு: மேற்கத்திய நாடுகள் கலக்கம்

0
16
Article Top Ad

உக்ரைன் அருகே அணு ஆயுத பயிற்சிகளை நடத்த ரஷ்ய இராணுவத்திற்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

“பயிற்சியின் போது, மூலோபாயமற்ற அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த பயிற்சிகள் எதிர்காலத்தில் நடைபெறும் என்றும், மேற்கத்திய நாடுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் ரஷ்யாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

விமானம் மற்றும் கடற்படைப் படைகளும், உக்ரைனின் எல்லையை ஒட்டிய மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரேனியப் பகுதிகளை உள்ளடக்கிய தெற்கு இராணுவ மாவட்டத்தைச் சேர்ந்த துருப்புகளும் இதில் கலந்துகொள்ளும்.

ரஷ்ய ஜனாதிபதியின் இந்த அறிவிப்பால் மேற்கத்திய அதிகாரிகள் பெருகிய முறையில் பீதியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டு ரஷ்யா விரிவான அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தத்தின் ஒப்புதலை கைவிட்டதுடன் அமெரிக்காவுடனான முக்கிய ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தில் இருந்தும் விலகியது.

அத்துடன், கடந்த பெப்ரவரி மாதம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அணு ஆயுதப் போரின் ஆபத்து இருப்பதாக புடின் எச்சரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here