மகாவலி என்ற போர்வையில் சிங்களவர்களுக்கு தாரைவார்க்கப்படும் தமிழர் பூர்வீகம்

0
15
Article Top Ad

தமிழ் அரசியல்வாதிகள் எமது மண்ணை காப்பாற்றுவதற்கு என்றாலும் நாடாளுமன்றத்தில் வாய் திறந்து பேச வேண்டும் என முல்லைத்தீவு தீவு மாதர் சங்க தலைவி சு.கங்கம்மா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம் மகாவலி என்ற போர்வையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் சிங்களவர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கொக்குத்தொடுவாயில் 3 கிராமங்கள் ஆறு கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்ட பரந்துபட்ட வயல் காணிகளைக் கொண்ட பிரதேசம். தற்போது சிங்கள அரசாங்கத்தின் ஆளுகைக்குள் இருக்கின்றது.

முப்பது வருடங்கள் குறித்த பகுதிக்குச் செல்வதற்காக தாம் காத்திருந்த நிலையில் யுத்தம் முடிவடைந்து 14 வருடங்கள் கடந்த நிலையில் தமது காணிகள் தம்மிடம் ஒப்படைக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதி விவசாய காணிகளைக் கொண்டதாகக் காணப்படும் நிலையில் மக்கள் அங்கு விவசாயத்தில் ஈடுபடுவதற்கு இதுவரை அனுமதிக்கப்படவில்லை.

அங்கு வாழ்ந்த மக்களுக்கு மீன்பிடி என்றால் என்னவென தெரியாத நிலையிலும் வேறு வழியின்றி சிறு மீன்பிடியை நம்பியே தற்போது வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்தும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமட்டுமல்லாது ஆமையன் குளத்தில் மூன்று ஏக்கர் காணி தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட போதிலும் சம்பத் நுகர திட்டத்தின் மூலம் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களான தண்ணி முறிப்பு மதுரமடு மேல் மானாவாரி காணிகளையும் சிங்கள மக்களுக்குப் பிடித்துக் கொடுத்துவிட்டனர்.

சிங்கள அரசாங்கம் மனசாட்சி இல்லாத ஒரு அரசாங்கம் சிங்கள மக்களுக்குத் தமிழ் மக்களின் காணிகளைப் பிடித்துக் கொடுக்க முடியும் என்றால் ஒரு பகுதியை ஏனும் தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற மனோநிலை வரவில்லை.

முல்லைத்தீவு சிங்கள பூமியாக மாற்றுவதை தடுத்து நிறுத்துங்கள் என தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here