இலங்கை வரலாற்றில் சகோதரர் ஒருவர், முதன்முறையாக ஜனாதிபதியாவார்: விரைவில் அமைச்சரவை கலைக்கப்படும்

0
65
Article Top Ad

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி இலங்கையில் முதன்முறையாக ஜனாதிபதியாக, சகோதரர் ஒருவர் நியமிக்கப்படுவார் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பதவியேற்றதன் பின்னர், ஊழல் நிறைந்த அமைச்சரவையை கலைப்பதே அவரது முதல் கடமை என குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறுகிய காலத்திற்குள் நாடாளுமன்றம் கலைக்கப்படும் எனவும், அதன் பின்னர் ஊழலற்ற நாடாளுமன்றத்திற்கு மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், தொடர்ந்து கருத்துரைத்த விஜித ஹேரத் ;

”அடுத்த வருடம் முதல் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.

அத்துடன், இந்த நாட்டில் துன்பப்படும் மக்களின் தலைவரான அனுரகுமார திஸாநாயக்க வரலாற்றில் முதல் தடவையாக மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் தலைவராக விளங்குகிறார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் சிதறிக் கிடக்கும் கறைபடியாத, நாட்டை நேசிக்கும், திசைகாட்டியின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கின்றது.

வங்குரோத்து அடைந்த நாட்டை வலுவான பொருளாதாரத்தை உருவாக்கி, மேம்பட்ட சமூக, பொருளாதார மற்றும் கலாசாரத்தை உருவாக்குவதன் மூலம் கட்டியெழுப்ப வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.

அந்த சவாலை ஏற்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி தேர்தல் நிறைவடையும் போதுவ் இந்த நாட்டின் தலைமைப் பொறுப்பை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அனுரகுமார திஸாநாயக்க நிச்சயம் ஏற்பார்.

இன்று ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளும் பிளவுபட்டு நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன.

பிற்போக்குவாதிகள் திசைகாட்டியைக் குற்றம் சாட்டுகிறார்கள். அவமதிக்கின்றனர்.

அவமானங்களும் கேலிகளும் இந்தப் பயணத்தை பின்னோக்கி இட்டுச்செல்லாது” எனத் தெரிவித்துள்ளார்.