இந்தியன் ரீரிலீஸ்: எல்லை மீறிய கமல் ரசிகர்கள்

0
30
Article Top Ad

இந்தியன் திரைப்படம் இன்று மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் 2 படம் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன் படத்தின் நீட்சியாக எடுக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களை இந்தியன் 2 படம் பார்ப்பதற்கு தயாராக்குவதற்காக இந்தியன் திரைப்படத்தை மீண்டும் திரையரங்குகளில் பார்த்து கொண்டாடியுள்ளனர்.

சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன் படத்தினை இந்தியன் 1 என்ற பெயரில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்தப் படத்துக்கு உற்சாகமாக வந்த கமல் ரசிகர்கள் திரையரங்கில் உள்ளே புஸ்வானம் கொளுத்தி படத்தை கொண்டாடினர்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஏசி வசதியுள்ள தியேட்டருக்குள் அதிக தீயை உண்டாக்கும் புஸ்வானத்தை பற்றவைத்ததற்கு மறுபக்கம் கண்டனங்களும் எழுந்து வருகின்றது.