பிரஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதியாட்டத்தில் முதற்தடவையாக அல்கரஸ் – ஸ்வரேவ் மோதல்

0
58
Article Top Ad

 

 

பிரான்ஸின் தலைநகர் பரீஸில் உலகின் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரஞ்சு ஒபன் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இம்முறை போட்டிகள் அடுத்த தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரங்களின் திறமைகளைப் பறைசாற்றும் போட்டிகளாக அமைந்து விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டிக்கு விளையாட ஸ்பெயின் நாட்டின் கார்லோஸ் அல்கரஸும் ஜேர்மனியின் அலக்ஸாண்டர் ஸ்வரேவ்வும் தகுதிபெற்றுள்ளனர். அரையிறுதிப்போட்டிகளில் அல்கரஸ் இத்தாலிய வீரர் யனிக் சின்னரைத் தோற்டித்த அதேவேளை ஸ்வரேவ் நோர்வேயைச் சேர்ந்த கஸ்பர் ரூட்டைத் தோற்கடித்தார்.