ரொஜர் பெடரர் ,நடால் ,ஜோகோவிக் ஆகியோரை விட கார்லோஸ் அல்கரஸ் சிறந்த டென்னிஸ் வீரரா?

0
31
Article Top Ad

 

2024ம் ஆண்டிற்கான French Open பிரஞ்சு பகிரங்க போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் சம்பியன் பட்டத்தை வென்றெடுத்திருந்தார் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கரஸ். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இறுதிப்போட்டியில் ஜேர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வரேவ்வை ஐந்து செட்களில் கடும் போராட்டத்திற்கு பின்னர் தோற்கடித்தார் அல்கரஸ்.

2022ம் ஆண்டில் தனது 19வது வயதில் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் பட்டத்தை வென்றதன் மூலம் தனது முதலாவது கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டத்தையும் கடந்தாண்டு விம்பிள்டன் பட்டத்தை வென்றதன் மூலம் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்ற அல்கரஸ் பிரஞ்சு பகிரங்க போட்டிகளில் ஈட்டிய வெற்றி மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டமாகும். இதன் மூலம் 21 வயதிலேயே புற்தரை, களிமண் தரை, மற்றும் கடினத்தரை ஆகிய வெ வ் வேறு தரைகளில் சம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனையை தனதாக்கியுள்ளார் அல்கரஸ.

 

அல்கரஸின் பிரஞ்சு பகிரங்க டென்னிஸ் வெற்றியை அடுத்து கருத்துவெளியிட்டுள்ள முன்னாள் உலக டென்னிஸ் ஜாம்பவான் ஜோன் மெக்கன்ரோ உட்பட பிரபலங்கள் 21வயதில் ரொஜர் பெடரர் ரபேல் நடால் நொவாக் ஜோகோவிச் ஆகியோர் காண்பித்த திறமைகளை விடவும் கார்லோஸ் அல்கரஸ் காண்பித்துவரும் ஆற்றல் வெளிப்பாடுகள் அபரீதமானது எனப் பாராட்டியுள்ளனர்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here