இலங்கை வருகின்றார் நடிகர் விஜய் தேவரகொண்டா

0
26
Article Top Ad

தென்னிந்திய பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ‘VD12’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புகள் இலங்கையில் தொடங்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘VD12 என பெயர் வைக்கப்பட்டுள்ளனது.

கௌதம் தின்னனுரியின் இயக்கத்தில் உருவாக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முழுவதும் பல்வேறு நகரங்களில் படக்குழுவினர் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். இதன்போது சில அதிரடி காட்சிகள் படமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விஜய் தேவரகொண்டா மற்றும் கௌதம் தின்னனுரி உள்ளிட்ட குழுவினர் இந்த வாரம் இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளனர்.

சுமார் 20 முதல் 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இருப்பினும் படம் பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்கள் பற்றிய கூடுதல் தகவல்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

விஜய் தேவரகொண்டா, தனது சமீபத்திய பொது தோற்றத்தில், கனமான தாடியுடன் காணப்பட்டார், இது படத்தில் அவரது பாத்திரத்திற்காக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.