கேரளாவில் ‘ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல்’: மனிதர்களுக்கு ஆபத்தா?

0
13
Article Top Ad

இந்தியா, கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் பன்றிகளிடையே பரவக்கூடிய கொடிய தொற்று நோயான ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தொற்றானது, பண்ணையில் வளர்க்கப்படும் பன்றிகள், காட்டுப் பன்றிகள் என இரண்டையும் பாதிக்கும். இவை குறித்த நோய்த் தாக்கத்துக்கு உள்ளான பன்றியிடமிருந்து எளிதாக ஏனைய பன்றிகளுக்கு பரவக் கூடியது.

திருச்சூர் மாவட்டம், மடக்கத்தாரா எனும் கிராமத்திலுள்ள தனியார் பண்ணையொன்றில் இருந்த பன்றிகளிடையே இந்த நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பண்ணையிலுள்ள 310 பன்றிகளை கொன்று புதைக்கும்படி மாவட்ட கால்நடை பராமரிப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த பாதிப்புக்குள்ளான பகுதியிலிருந்து பன்றி மற்றும் பன்றி இறைச்சி தீவனங்கள் ஆகியவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியிலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதிகளை நோய் பாதிப்பு பகுதியெனவும் பத்து கிலோமீட்டர் சுற்று வட்டாரத்திலுள்ள பகுதிகளை நோய் கண்காணிப்பு பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது பன்றிகளை மட்டும் பாதிக்கும் நோய். இதனால் மனிதர்களுக்கோ அல்லது வேறு விலங்குகளுக்கோ எதுவித பாதிப்பும் ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்தப் பகுதியில் இருப்பவர்கள் சில காலத்துக்கு பன்றி இறைச்சி உண்ணாமல் இருப்பது சிறந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here