இந்திய அணிக்கு அறிவிக்கப்பட்ட 125 கோடி ரூபா பரிசு: யார்? யாருக்கு எவ்வளவு தொகை

0
15
Article Top Ad

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் அண்மையில் நடந்து முடிந்த T20 உலகக் கிண்ண தொடரில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பணப்பரிசை இந்திய கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது.

இந்நிலையில், குறித்த தொகையில் இருந்து யார்? யாருக்கு எவ்வளவு வழங்கப்படுகின்றது என்ற விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இவ்வாறு வழங்கப்படும் பரிசுத் தொகை 15 பேர் கொண்ட குழாம் மற்றும் பயிற்சி ஊழியர்களுக்கு மட்டுமன்றி மேலதிக வீரர்களாக இணைந்த நான்கு வீரர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பணப்பரிசின் பெரும்பகுதி வீரர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இடையே பகிர்ந்து வழங்கப்படவுள்ளது.

இதன்படி, அணியின் 15 வீரர்கள் மற்றும் டிராவிட் ஆகியோருக்கு தலா ஐந்து கோடி ரூபா வழங்கப்படும்.

துடுப்பாட்ட பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே, களத்தடுப்பு பயிற்சியாளர் டி திலீப் ஆகியோருக்கு தலா 2.5 கோடி ரூபா வழங்கப்படவுள்ளது.

மேலும், அஜித் அகர்கர் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட மூத்த தேர்வுக் குழுவுக்கு தலா ஒரு கோடி ரூபா வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அணியில் உள்ள நான்கு மேலதிக வீரர்கள் மற்றும் துணைப் பணியாளர்களுக்கு ஒரு கோடி ரூபா வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here