ராஜபக்கசர்களுடன் நெருங்கிய உறவில் இருந்தாரா கிளப் வசந்த?

0
11
Article Top Ad

அத்துருகிரியவில் நேற்று திங்கட்கிழமை (08) சுட்டுக்கொல்லப்பட்ட “கிளப் வசந்த“ என்ற நபர், அரசியல்வாதிகளின் பெருமளவிலான கறுப்புப் பணத்தை மறைத்து வைத்திருந்ததாக பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

இவர் ராஜபக்ச குடும்பத்துடன் மிக நெருக்கமான உறவைப் பேணி வந்திருந்தவராக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த கொலைச் சம்பவத்துக்கு நீண்ட காலத்திற்கு முன்பே, ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புடைய கறுப்புப் பணம் வசந்த மூலம் கொழும்பு பங்குச் சந்தையில் செலுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவரது பெயரில் அரசியல் பலம் வாய்ந்தவர்கள் நிலம் உள்ளிட்ட ஏராளமான சொத்துக்களை வாங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அரசியல்வாதிகளின் கறுப்புப் பணத்தின் ஆதாரத்தை மறைக்க இந்தக் கொலை நடந்திருக்கலாம் என பலரும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here