மோடியின் ரஷ்ய பயணம்: சீனா கட்டம்

0
30
Article Top Ad

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ரஷ்ய பயணம் சர்வதேச அளவில் பெரும் கவனம் பெற்றிருக்கிறது.

சீனாவுக்கு பதில் ரஷ்யாவுக்கு மாற்று பாதைகளை ஏற்படுத்தவே மோடி அங்கு சென்றிருக்கிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

இந்திய – ரஷ்ய உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2021ல் டெல்லியில் இந்த மாநாடு நடைபெற்றது.

இதில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின்பங்கேற்றார். அதன் பிறகு 2022, 2023ஆம் ஆண்டுகளில் உச்சி மாநாடு நடைபெறவில்லை. இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு மாநாடு நடத்த முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி ஜூலை 8,9 திகதிகளில் ரஷ்யாவில் மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக மோடி நேற்றுமுன்தினம் மாஸ்கோ சென்றடைந்ததுடன், நேற்று செவ்வாய்க்கிழமை ரஷ்ய ஜனாதிபதி புடினை கிரம்ளின் மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார்.

மோடியின் இந்த பயணத்தில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கையில். இந்த சந்திப்பு, சீனா பக்கம் ரஷ்யாவை செல்லவிடாமல் தடுப்பதே என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

அதாவது உக்ரைனுடன் ரஷ்யா போரை தொடங்கிய பின்னர் சீனாவுடன் அந்நாடு உறுதியாக கைகோர்க்க தொடங்கியது. இரு நாட்டின் உயர்மட்ட அதிகாரிகள் மத்தியில் நெருக்கமான பேச்சு வார்த்தைகள் நடந்தன. இது போரிலும் எதிரொலித்தது.

சீனா-ரஷ்யா கூட்டு சேர்ந்துவிட்டதை உணர்ந்த மேற்கு நாடுகள் உக்ரைனுக்கான ஆயுத உதவியை அதிகரித்தன. ரஷ்யாவும் விட்டுக்கொடுப்பதாக இல்லை.

அதேநேரம் சீன ஜனாதிபதி ஜி ஜிங் பிங்கை, புடின் நேரடியாக சந்தித்திருந்து சர்வதேச அரசியலில் முக்கிய நகர்வாக பார்க்கப்பட்டது. இது இந்தியாவுக்கு லேசான கவலைகளையும் எழுப்பியிருந்தது.

இந்நிலையில், தற்போது மோடி-புடின் சந்திப்பு குறித்து சர்வதேச அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

“ரஷ்யாவிற்கு மாற்று வழிகள் இருப்பதை உறுதி செய்ய இந்தியா விரும்புகிறது. சீன நெருக்கம் காரணமாக மேற்கு நாடுகளால் ரஷ்யா தனித்துவிடப்படவில்லை.

அதற்கு மாற்று பாதைகள் இருக்கிறது என்பதை இந்த சந்திப்பு சமிஞ்சை செய்திருக்கிறது. தற்போது மேற்கு நாடுகளின் பொருளாதார தடையை ரஷ்யா எதிர்கொண்டிருக்கிறது. எனவே, சமாதானமாக போக வேண்டிய சூழலில் இருக்கிறது. இதற்கு இந்தியா உதவும்.

மறுபும் இந்தியா-ரஷ்யா உறவுகள் நீர்த்துப்போகவில்லை என்பதையும் மோடி, சர்வதேச நாடுகளுக்கு எடுத்து சொல்லியிருக்கிறார்.

கடந்த காலங்களில் இந்தியாவுக்கு ஆயுதங்களை அனுப்புவதில் ரஷ்யா தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. 2017ஆம் ஆண்டு முதல் 2022 வரை இந்தியாவுக்கான ஆயுத பரிமாற்றத்தில் ரஷ்யா பாதியை பூர்த்தி செய்திருக்கிறது.

சீனாவுடன் இந்தியாவுக்கு மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், சீனாவுக்கு இந்த சந்திப்பு முக்கிய செய்தியை அனுப்பியுள்ளது” என்று விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

இன்னும் ஒருபடி மேலேபோய், இந்த சந்திப்பு சீனாவை நம்ப வேண்டாம் என்று ரஷ்யாவை எச்சரிப்பதற்காக கூட இருக்கலாம் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமான உறவு சமீபத்தில் ஆழமடைய தொடங்கியுள்ளது. இதை பயன்படுத்தி இந்தியாவை பகடை காயாக ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா பயன்படுத்தலாம் என்றும் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.