இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம்: ஒருநாள் மற்றும் ரி20 தொடர் மாத இறுதியில் ஆரம்பம்

0
39
Article Top Ad

ஒருநாள் மற்றும் ரி20 தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகளைக் கொண்ட ரி20 தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி கண்டி-பல்லேகல விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

அத்துடன், ஒரு நாள் தொடர் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 1ஆம் திகதி கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.