ஜனாதிபதி தேர்தல் குறித்த ஆணைக்குழுவின் அறிவிப்புக்கு ஜூலி சங் வரவேற்பு

0
155
Article Top Ad

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறும் என இன்று காலை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் இந்த அறிவிப்பை வரவேற்கின்றோம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தமது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது ஜனநாயகத்திற்கான இலங்கையின் நீண்டகால அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் விதத்தில் அவர்களை வலுப்படுத்தும் நீதியான சுதந்திரமான தேர்தலை எதிர்பார்க்கின்றோம் எனவும் குறித்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.