பரிஸ் ஒலிம்பிக்குக்கு எதிராக சதித் திட்டம்: போட்டிகளுக்கு பாதிப்பா?

0
61
Article Top Ad

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த சனிக்கிழமை ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கடந்த சனிக்கிழமை போட்டி ஆரம்பமான போது பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் பிரதான ரயில் வழித்தடங்களில் ஒரே நேரத்தில் திட்டமிட்டு தீ வைக்கப்பட்டது.

பிரான்ஸின் அதிவேக ரயில் சேவையை மர்ம நபர்கள் திட்டமிட்டு முடக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தீ விபத்து தாக்குதலால், பல வழித்தடங்கள் ரத்து செய்யப்பட்டிருததன. இதனால், சுமார் 8 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படடிருந்த நிலையில், பாதிப்புகள் சரிசெய்யப்பட்டு போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

இந்த நிலையில் நேற்று பிரான்ஸ் முழுவதும் பல்வேறு இடங்களில் தொலைத்தொடர்பு கேபிள்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

பைபர் ஆப்டிக்ஸ் தொலைத்தொடர்பு கேபிள்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. செல்போன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தொலைத்தொடர்புத்துறை செயலர் மெரினா பெர்ராரி தெரிவிக்கையில்,

ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளுக்கு இடைப்பட்ட இரவில் இந்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் தொலைதொடர்பு சேவைகள் பைபர் லைன் மற்றும் மொபைல் தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரதான நகரமான மார்சில் [Marseille] உட்பட பல்வேறு நகரங்களில் இந்த சேதங்கள் பதிவாகியுள்ளன என்று தெரிவித்துள்ளார். இதனால் நடந்துவரும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி நாடுகளிடையே எழுந்துள்ளது.