மீண்டெழுந்த இலங்கை – டி20 சாம்பியனை 32 ஓட்டங்களால் வீழ்த்தி அபார வெற்றி!

0
25
Article Top Ad

இலங்கை மற்றும் சுற்றுலா இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 32 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நேற்று (04.08.2024) நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அதன்படி, 241 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 42.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 208 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Jeffrey Vandersay 6 விக்கெட்டுக்களையும், Charith Asalanka 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இதேவேளை முதல் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்தமை குறிப்பிட்டதக்கது.

இம்முறை டி20 உலக கிண்ணத்தை வென்ற பலமான அணியாக இந்தியா உள்ளது. ஆனால், முதல் ஒரு நாள் போட்டியிலும் சரி இரண்டாவது ஒருநாள் போட்டியிரும் சரி இலங்கையின் அபாரமான பந்துவீச்சு இந்தியாவை திணறவைத்துள்ளது.

தீர்மானமிக்க மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றிபெற்றால் ஒருநாள் தொடரை கைப்பற்றும் என்பதுடன், மீண்டும் ஒரு பலமான அணியாக உருவெடுப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது. குறிப்பாக தற்போதைய தலைமை பயிற்சியாளர் சனத் ஜயசூரிய அணிக்குள் பல மாற்றங்களை செய்து வருகிறார். அந்த மாற்றங்கள் தான் இலங்கை அணியின் இந்த வெற்றிக்கு காரணமாக உள்ளது.