Article Top Ad
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல் சூழ்நிலையினால் மசகு எண்ணெய் விநியோகம் தடைப்படும் என்ற அச்சம் சர்வதேச சந்தையில் நிலவுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சிப் போக்கைப் பதிவு செய்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.77 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சுமார் 3% குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.