புதிய பொலிஸ்மா அதிபர் விவகாரம்: சபாநாயகருக்கு விடுக்கப்பட்டுள்ள வலியுறுத்தல்

0
18
Article Top Ad

பொலிஸ்மா அதிபர் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கமைய செயற்படுமாறு சட்டமா அதிபர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் சட்டமா அதிபரின் ஆலோசனை கோரி அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் சட்டமா அதிபர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

இந்த விடயம் குறித்து செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கப்பெற்றுள்ளதாக சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, பொலிஸ்மா அதிபர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து பிரதம நீதியரசருடன் கலந்துரையாடப் போவதில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பிரதம நீதியரசருடன் கலந்துரையாடுவதற்கு எவ்வித சட்ட அடிப்படைகளும் இல்லை என சபாநாயகர் கூறியுள்ளார்.