சஜித் – தயாசிறி உடன்படிக்கை கைச்சாத்து!

0
161
Article Top Ad

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கான உடன்படிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று கைச்சாத்திட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

எவ்வாறாயினும், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவரது வெற்றிக்கு தமது ஆதரவைத் தெரிவித்தனர்.