கொடி பறக்கும், தமிழ்நாடு சிறக்கும்: தமிழக வெற்றிக்கழக கொடி அறிமுகம்

0
27
Article Top Ad

தமிழக வெற்றிக்கழக கொடி நாளை வியாழக்கிழமை முதல் பறக்கும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் நாளை வியாழக்கிழமை காலை 9.15 இற்கு கட்சிக் கொடியை நடிகர் விஜய் ஏற்றி வைக்கிறார்.

அவர் அறிக்கையொன்றை வெளியிட்டு அவரது கட்சிக் கொடி நாளை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே. சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம்.

அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஒகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள்.

தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு, கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன்.

நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்.