பரா ஒலிம்பிக் நாளை ஆரம்பம் : இலங்கையில் இருந்து முதன்முறையாக அதிகளவான வீரர்கள்

0
21
Article Top Ad

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் 2024ம் ஆண்டுக்கான பராஒலிம்பிக் போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ளன.

இதன் ஆரம்பமாக, பராஒலிம்பிக் தீபம், பிரான்சையும் பிரித்தானியாவையும் இணைக்கும் Channel Tunnel எனும் கடலுக்கடியில் செல்லும் சுரங்கப்பாதை வழியாக பிரித்தானியாவிலிருந்து பிரான்ஸிற்கு எடுத்துவரப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில், இலங்கையிலிருந்து 8 தடகள வீரர்கள் அடங்கிய குழுவொன்று இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக பிரான்ஸிற்கு சென்றுள்ளது.

இலங்கையிலிருந்து அதிகளவான வீரர்கள் பங்கேற்பது இதுவே முதற்தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.