கனடாவின் புதிய கொள்கைக்கு எதிராக இந்திய மாணவர்கள் போராட்டம்: மீண்டும் சொந்த நாடுகளுக்கு அனுப்பும் அபாயம்

0
25
Article Top Ad

கனடாவின் புதிய கூட்டாட்சி கொள்கைக்கு எதிராக நூற்றுக்கணக்கான இந்திய மாணவர் பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சர்வதேச மாணவர்கள் குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்தவர்கள், சிறந்த வாழ்க்கையை உருவாக்குவதற்கான நம்பிக்கையில் வட அமெரிக்க நாட்டிற்குச் செல்ல வேண்டும் என கனவு காண்கிறார்கள்.

ஆனால் அறிவிக்கப்பட்ட குடியேற்றக் கொள்கை மாற்றங்கள் 70,000 இற்கும் மேற்பட்ட மாணவர் பட்டதாரிகளின் எதிர்காலத்தை நிச்சயமற்ற நிலைக்கு தள்ளியுள்ளன.

கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவு மாகாணத்தில் உள்ள சட்டப் பேரவையின் முன்பாக இந்திய மாணவர்கள் முகாமிட்டு மூன்று மாதங்களுக்கும் மேலாக இந்த திடீர் கொள்கை மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

ஒன்டாரியோ, மனிடோபா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களிலும் இதேபோன்ற போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நிரந்தர வதிவிட நியமனங்களின் எண்ணிக்கையை 25 சதவீதம் குறைத்தல் மற்றும் கற்கை அனுமதிகளை கட்டுப்படுத்துவதை புதிய கொள்கைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக கனடாவில் மக்கள்தொகை அதிக வளர்ச்சியை கண்டுள்ளதால் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கனடாவில் கடந்த ஆண்டு மக்கள்தொகை அதிகரிப்பில் சுமார் 97 சதவீதம் குடியேற்றத்தால் உந்தப்பட்டது.

இதன் காரணமாக சர்வதேச மாணவர்கள் மீண்டும் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் அபாயம் காணப்படுவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் அரசாங்கம் தங்களை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொண்டதென சர்வதேச மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.