விஜய்யின் மாநாடு – வெளியான அறிவிப்பு

0
17
Article Top Ad

நடிகர் விஜய்யின், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த வாரம் தன்னுடைய கட்சி கொடி மற்றும் பாடலை வெளியிட்ட விஜய், தற்போது த.வெ.க கட்சியின் முதல் மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளார்.

அதன்படி விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் செப்டம்பர் 23ஆம் திகதி தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு நடைபெற உள்ளதாகவும், விஜய்யின் உத்தரவின் பேரில் மாநாட்டுக்கு அனுமதி கோரி த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனுமதி கோரி மனு அளித்துள்ளார்.

இது குறித்த தகவல் தற்போது உறுதியாகி உள்ளது.மாநாட்டுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில்,மாநாட்டின் பணிகள் கூடிய விரைவில் ஆரம்பமாக உள்ளன.

மேலும், இந்த மாநாட்டில் சுமார் பத்து இலட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தன்னுடைய முதல் மாநாட்டையே மிகப் பிரமாண்டமாக விஜய் நடத்த திட்டமிட்டுள்ளார் .

இந்நிலையில், த.வெ.க கொடியில் யானை உருவம் இருப்பதற்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சியினால் முன்வைக்கப்பட்ட புகார் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இதையடுத்து எடுக்கப்பட்ட முடிவில், பகுஜன் சமாஜ் கட்சி புகாருக்கு தேர்தல் கமிஷனிடம் இருந்து விளக்கம் கேட்டு முறைப்படி கடிதம் வந்தால் அதற்கு தகுந்த விளக்கம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.