ஊடகவியலாளர்கள் உட்பட 92 அமெரிக்கர்களுக்கு தடை: ரஷ்யாவின் பதிலடி

0
21
Article Top Ad

தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (The wall street journal) நியூயோர்க் டைம்ஸ் (Newyork times) மற்றும் வொஷிங்டன் போஸ்ட் (Washington post) ஊடகவியலாளர்கள் உட்பட 92 அமெரிக்க குடிமக்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு ரஷ்யா தடை விதித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தின் “ரஸ்ஸோபோபிக் பாடநெறி”க்கு பதிலளிக்கும் வகையில் இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் நேற்று புதன்கிழமை அறிவித்தது.

தடை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் ரஷ்யா மற்றும் ரஷ்ய ஆயுதப் படைகள் பற்றிய போலிச் செய்திகளை தயாரித்து பரப்புவதில் ஈடுபட்டுள்ள முன்னணி நபர்கள் என கூறப்படுகிறது.

பட்டியலில் உள்ள மற்ற அமெரிக்கர்கள் சட்ட அமலாக்க முகவர், கல்வியாளர்கள் மற்றும் வணிகங்கள் மற்றும் சிந்தனைக் குழுக்களில் பணியாற்றும் நபர்கள் உள்ளனர்.

தற்போது வெளியுறவு அமைச்சகத்தின் தகவலின்படி, ரஷ்யா 2,000க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களை நாட்டிற்குள் நுழைய தடை விதித்துள்ளது.

கடந்த வாரம், உக்ரெய்னுடனான போரின் போது ரஷ்யாவை ஆதரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய தடைகளை அறிவித்தது.

கருவூலத் திணைக்களத்தின் படி, ரஷ்யா, ஐரோப்பா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.