நோவக் ஜோகோவிச், 28 ஆம் நிலை வீரரான அவுஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரினிடம் தோல்வியடைந்ததையடுத்து, 18 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக அமெரிக்க ஓபன் நான்காவது சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை இழந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை (30) அன்று நியோர்க்கின் ஆர்தர் ஆஷ் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் 25 வயதான அலெக்ஸி பாபிரின் நடப்பு சாம்பியனை 4-6, 4-6, 6-2, 4-6 என்ற செட்களில் தோற்கடித்தார்.
இந்த ஆட்டம் 3 மணி நேரமும் 19 நிமிடங்களும் நீடித்தது.
இதன் விளைவாக 24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற செர்பியன் வீரர் ஜோகோவிச் 2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன் முறையாக, இந்த ஆண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஏதுமின்றி ஆண்டை நிறைவு செய்யும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டார்.
அதேநேரம், பாபிரின் முதல் முறையாக ஒரு கிராண்ட்ஸ்லாம் போட்டியின் நான்காவது சுற்றை எட்டுவதற்கு தனது வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார்.
ஜோகோவிச் இறுதியாக 2006 ஆம் ஆண்டு நியூயோர்க்கில் நான்காவது சுற்றில் தோல்வியடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.