அரகலயவின் போது மனித உரிமை மீறல்?: உயர் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த வழக்கு

0
12
Article Top Ad

கொழும்பு – காலி முகத்திடலில் அரகலய போராட்டத்தின் போது, ​​ஜனாதிபதி மாளிகையைச் சுற்றியுள்ள சாலைகளில், அபாயகரமான சாலைத் தடுப்புகளை வைத்து பொதுமக்கள் துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நேற்று (04) நடைபெற்றது.

இதன்போது உரிமை மீறப்பட்டமை தொடர்பில் விரிவான விவாதம் இடம்பெற்றிருந்தது.

இதன்படி, இந்த முறைப்பாட்டின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமார் அழைப்பாணை அனுப்புமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், இதுபோன்ற ஆபத்தான சாலைத் தடுப்புகளை வைத்து பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கவும், இழப்பீடு தொகையாக 05 கோடி ரூபாவை நஷ்ட ஈடாக பெற்றுத்தரும் படி மனுதாரர் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here