ஆப்பிரிக்காவை கட்டுக்குள் கொண்டுவரும் சீனா

0
56
Article Top Ad

சீனா-ஆப்பிரிக்கா ஒத்துழைப்புக்கான மன்றத்தின் (50 நாடுகள்) (FOCAC) 2024 உச்சிமாநாடு ஆப்பிரிக்காவின் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க கவனத்தை செலுத்தியுள்ளது.

பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான விரிவான மற்றும் வளர்ச்சி அணுகுமுறையை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை ஆப்பிரிக்காவின் தலைவர்கள் இந்த மாநாட்டில் வலியுறுத்தியுள்ளனர்.

புதிய சகாப்தத்திற்கான சீனா-ஆப்பிரிக்க சமூகத்தை உருவாக்குவதற்கான பிரகடனம், அடுத்த மூன்று ஆண்டுகளில் FOCAC க்கு வழிகாட்டும் செயல் திட்டத்துடன் நேற்று வியாழக்கிழமை பெஜ்ஜிங்கில் நடைபெற்ற சீன – ஆப்பிரிக்க மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

உலகளாவிய பாதுகாப்பு முன்முயற்சி கூட்டாண்மையை நிறுவுவதற்கும் செயல்படுத்துவதற்கும், உலகளாவிய பாதுகாப்பு முன்முயற்சியின் ஒரு மண்டலத்தை உருவாக்குவதற்கும் சீனா ஆப்பிரிக்காவுடன் கைகோர்க்கும் என இந்த மாநாட்டில் சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பின் தெரிவித்துள்ளார்.

சீனா-ஆப்பிரிக்கா அமைதி மற்றும் பாதுகாப்பு மன்றத்தின் கூட்டத் தொடரை தொடர்ந்து நடத்தும், ஆப்பிரிக்காவில் தொழில்முறை தரத்தை மேம்படுத்தவும், நிறுவன முதலீகளை வலுப்படுத்தவும் சீனா அடுத்த மூன்று ஆண்டுகளில் பணியாற்ற உள்ளதாகவும் ஷீ ஜிங் பின் கூறியுள்ளார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் 51 பில்லியன் மதிப்பிலான 360 பில்லியன் யுவான்களை ஆப்பிரிக்க நாடுகளில் சீனா முதலீடு செய்யும் என்றும் ஷீ ஜிங் பின் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதம் மற்றும் வன்முறை தீவிரவாதத்திற்கு எதிராக போராடும் திறனை மேம்படுத்த ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைந்து சீனா பணியாற்றும்.

பாதுகாப்பு இல்லாமல், வளர்ச்சியை நிலைநிறுத்துவது கடினம். எனவே, சீனா-ஆப்பிரிக்கா ஒத்துழைப்பு என்பது பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு மட்டுமல்ல, பாதுகாப்பு ஒத்துழைப்பும் ஒரு தவிர்க்க முடியாத அம்சமாகும் என்றும் ஷீ ஜிங் பின் வலியுறுத்தியுள்ளார்.

சீனா தமது பட்டுப்பாதை திட்டத்தை விரிவுபடுத்திவரும் பயணத்தில் ஆப்பிரிக்க நாடுகளை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனால் இங்கு தமது பொருளாதார முதலீடுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.

2021ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆப்பிரிக்காவில் தமது முதலீடுகளை மூன்று மடங்காக சீனா அதிகரித்தள்ளதுடன், ஆப்பிரிக்க தலைவர்களுடன் நல்லுறவையும் பேணி வருகிறது. இது மேற்கத்திய நாடுகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

யுத்த காரிணகளில் மற்றும் ஆப்பிரிக்காவின் செயல்பாடுகளில் பங்குபற்றிவரும் மேற்கத்திய நாடுகள் அந்த நாடுகளின் பொருளாதாரங்கள் குறித்து கவனம் செலுத்துவதில்லை

அதனை உணர்ந்துள்ள சீனா இங்கு பொருளாதார ரீதியாக தமது நலன்களை அதிகரித்துக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமையானது எதிர்காலத்தில் இந்த பிராந்தியம் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வர வாய்ப்புள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.