‘GOAT’ முதல் நாள் வசூல்: சூடு பிடிக்கும் பாக்ஸ் ஆபிஸ்

0
34
Article Top Ad

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து நேற்று (05) வெளியான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்‌ஷன் திரைப்படமான ‘GOAT – The Greatest of All Time’ உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ஒரு அற்புதமான தொடக்கத்தை பதிவு செய்தது.

த்ரில்லிங் திரைப்படமான GOAT உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் சுமார் 43 கோடி இந்திய ரூபாயை வசூலித்ததாக டிராக்கிங் இணையதளமான Sacnilk தெரிவித்துள்ளது.

உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் ‘GOAT’ படம் ரூ.100 கோடியை (மொத்தம்) எளிதாகத் தாண்டியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு 10 மணி வரையிலான முன்பதிவுகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் வசூல் தொடர்பான அதிகாரப்பூர்வ தகல்களை திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் இன்னும் வெளியிடவில்லை.

‘GOAT’ செப்டம்பர் ஐந்தாம் திகதி உலகம் முழுவதும் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ள விஜய்யின் இறுதிக்கட்ட படம் இதுவாகும்.

முன்னதாக திரையரங்குகளில் ‘76.23 சதவீத முன் பதிவுகளை GOAT திரைப்படம் பதிவு செய்துள்ளது. இதனால், ‘GOAT’ பாக்ஸ் ஆபிஸில் சரித்திரம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் துணை நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, ஜெயராம், லைலா, மீனாட்சி சவுத்ரி மற்றும் அஜ்மல் அமீர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள ‘GOAT’ படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி மற்றும் எடிட்டர் வெங்கட் ராஜன் ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

எனினும், GOAT இன் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல், பிரபாஸின் கல்கி 2898 ADக்கு பின்தங்கி உள்ளது. கல்கி 2898 AD இந்தியாவில் முதல் நாளில் ரூ.114 கோடி வசூலித்தது.

தெலுங்கு அறிவியல் புனைகதை காவியமாக கல்கி 2898 AD இதுவரை 2024 இல் அதிக வசூல் செய்த திரைப்படமாக சாதனை படைத்துள்ளது.