தமிழகத்தில் அரச பாடசாலை ஆன்மீக சொற்பொழிவாற்றி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த மகா விஷ்ணுவை பொலிஸார் கைது செய்து இரசிய இடத்தில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய அவரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்த சைதாப்பேட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அண்மையில் வைதாப்பேட்டையில் அரச பாடாசலை ஒன்றில் இடம்பெற்ற தொற்பொழிவு நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி குறித்து மகா விஷ்ணு பேசிய கருத்து பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
அத்துடன், அவரின் பேச்சை குறுக்கீடு செய்த மாற்றுத்திறனாளி ஒருவரிடமும் மகா விஷ்ணு கடும் வாக்குவாதம் செய்திருந்தார்.
இதனையடுத்து மகா விஷ்ணு மீது தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவர் சைதாப்பேட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அவர் மீது மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஊனமுற்றோா் உரிமைகள் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய மகா விஷ்ணு சென்னை விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த விவகாரத்தில் இரண்டு அரச பாடசாலைகளின் தலைமையாசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் மீது மூன்று நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியளித்துள்ளார்.

