லெபனான் மீது இஸ்ரேல் தரைவழித் தாக்குதல்: ஜோ பைடன் எதிர்ப்பு

0
10
Article Top Ad

இஸ்ரேல் இராணுவம் ஒரு வாரத்துக்கும் மேலாக லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இத் தாக்குதலில் சுமார் 1000 பேர் உயிரிழந்துள்ளதோடு 10 இலட்சத்துக்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை பெய்ரூட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் அவரது மகள் ஜைனபும் கொல்லப்பட்டனர்.

இந்த உயிரிழப்பினால், ஹிஸ்புல்லா அமைப்பினர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

இதனை பொருட்படுத்தாத இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 109 லெபனானியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதுவரையில் வான் வழியாகத் தாக்குதல்களை மேற்கொண்டு வந்த இஸ்ரேல் நேற்று திங்கட்கிழமை முதல் தரைவழித் தாக்குதல்களை தொடங்கியுள்ளது.

தெற்கு லெபனானிலுள்ள கிராமங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் படைகள் மீது ஹிஸ்புல்லாவும் தாக்குதல்களை முன்னெத்துள்ளதாக அவ் அமைப்பு அறிவித்துள்ளது.

இதற்கிடையில் லெபனான் மீதான இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி போர் நிறுத்தத்தையும் வலியுறுத்தியுள்ளார் ஆனால், அதற்கு உடன்படுவதாகத் தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here