நாகை – காங்கேசன் பயணிகள் கப்பல் சேவை ; காலநிலை சீர்கேட்டினால் 2 நாள்களுக்கு இரத்து

0
24
Article Top Ad

காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, நாகை – காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை 2 நாள்களுக்கு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை பருவநிலை மற்றும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை (ஒக்.15) மற்றும் வியாழக்கிழமை (ஒக்.17) ஆகிய இரண்டு நாள்களுக்கு இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கடல் சீற்றமாக இருக்கும் மற்றும் சூறைக்காற்று வீசும் என்பதாலும், கப்பலை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாலும் நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்று கப்பல் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.