அரசியல்வாதிகள் உண்மையிலேயே ஓய்வு பெற மாட்டார்கள்-முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

0
45
Article Top Ad


அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராக இல்லை என்றும், தனது ஓய்வு தற்காலிகமானது என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று நான் நினைத்தேன், ஆனால் அரசியல்வாதிகள் உண்மையிலேயே ஓய்வு பெற மாட்டார்கள்,” என்று அவர் கூறினார்.

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, அனைத்தும் தயாராக இருப்பதாகவும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) இலகுவான வெற்றியைப் பெறும் எனவும் தெரிவித்தார்.

Video courtesy: Daily Mirror

“அரசியல்வாதிகள் ஒய்வு பெறத் தொடங்குகிறார்கள் என்று ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க கூறியதை நான் கேட்கவில்லை, அரசியல்வாதிகள் இப்போது முதல்முறையாக ஓய்வு பெற ஆரம்பித்துள்ளனர் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாத அரசியல்வாதிகள் ஏராளம் பேர் உள்ளனர் “என்று அவர் மேலும் கூறினார்.

பாராளுமன்றத்தில் 113 ஆசன பெரும்பான்மையை SLPP ஆல் இலகுவாகப் பெற முடியும் என்றும் அவர் கூறினார்.