இலங்கையில் தாக்குதல் நடத்தப்படலாம் – அமெரிக்கத்தூதரகம் பயண எச்சரிக்கை

0
24
Article Top Ad

அறுகம்குடா பகுதியில் சுற்றுலாத் தலங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என தகவல் கிடைத்துள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த பகுதிக்கு மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு தமது நாட்டுப் பிரஜைகளுக்கு அமெரிக்கத் தூதரகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சந்தேகத்திற்கு இடமான முறையில் சம்பவங்கள் இடம்பெற்றால் 119 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு தனது நாட்டுப் பிரஜைகளுக்கு அமெரிக்கத்தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.

தொலைபேசி போன்ற தொடர்பு சாதனங்களை வைத்திருக்குமாறும் இலங்கையின் உள்ளூர் ஊடகங்களை பார்வையிடுமாறும் தனது நாட்டுப் பிரஜைகளிடம் அமெரிக்கத் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.