25 ஆண்டுகளுக்குள் நீர் நெருக்கடி: ஏற்படும் அபாயம்

0
10
Article Top Ad

 

நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க அவசர நடவடிக்கை எடுக்காவிடின், நன்னீர் சார்ந்திருக்கும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் அழிவை முடிவுக்குக் கொண்டுவராவிடின் எதிர்வரும் 25 ஆண்டுகளுக்குள் நீர் நெருக்கடியை பூமி எதிர்கொள்ளும் என உலகளாவிய நீர் பொருளாதார ஆணையத்தின் அறிக்கை குறிப்பிடுகின்றது.

கடந்த வியாழக்கிழமை உலகளாவிய நீர் பொருளாதார ஆணையம் இது தொடர்பிலான அறிக்கையை வெளியிட்டிருந்தது.

அதன்படி, எதிர்வரும் 25 ஆண்டுகளில், உலக உணவு உற்பத்தியில் பாதிக்கும் மேற்பட்டவை தோல்வியடையும் அபாயம் ஏற்படும் என இந்த அறிக்கையைத் தொகுத்த நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகளாவிய நீரியல் அமைப்புகளின் நிலை மற்றும் அவற்றை எவ்வாறு நிர்வகிப்பது என்பது பற்றிய விரிவான பார்வையை உருவாக்குவதற்கு முன்னணி விஞ்ஞானிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்களின் உறுதிப்பாட்டின் அடிப்படையில் நெதர்லாந்து 2022ஆம் ஆண்டில் நீர் பொருளாதாரத்திற்கான உலகளாவிய ஆணையத்தை நிறுவியது.

194 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையானது, நீர் நெருக்கடியின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து, கொள்கை வகுப்பாளர்களுக்கான தீர்வுகளை முன்வைக்கும் மிகப்பெரிய உலகளாவிய ஆய்வாகும்.

உலக மக்கள்தொகையில் பாதி பேர் ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறார்கள் என்றும், காலநிலை நெருக்கடி மோசமடைவதால் அந்த எண்ணிக்கை உயரும் என்றும் குறித்த அறிக்கை கணித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here