மின்னேரியா தேசிய வனத்தில் நியூஸிலாந்து அணி

0
50
Article Top Ad

இலங்கை வந்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது மின்னேரியா தேசிய வனத்துக்கு சுற்றுப் பயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது.

ஜூப் வண்டி மூலமாக மின்னேரியா தேசிய வனத்துக்கு சப்பாரி மேற்கொண்ட நியூஸிலாந்து வீரர்கள், அங்குள்ள யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளை கண்டு மகிழ்ந்தனர்.

நியூஸிலாந்து அணியானது இலங்கையுடன் எதிர்வரும் நவம்பர் 09, 10 ஆகிய திகதிகளில் தம்புள்ளை, ரங்கிரி மைதானத்தில் இரு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும்.

அதன் பின்னர் நவம்பர் 13, 17 மற்றும் 19 ஆகிய திகதிகளில் தம்புள்ளையிலும், கண்டி பல்லேகலயிலும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும்.