திடீரென விவாகரத்து செய்த ஏ.ஆர்.ரகுமான், சாய்ரா தம்பதி

0
21
Article Top Ad

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து மிகவும் பரபரப்பான விஷயங்களாக நடந்து வருகிறது.

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து, தனுஷ்-நயன்தாரா பிரச்சனை, இப்போது நேற்று இரவு வந்த ஷாக்கிங் தகவல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்-சாய்ரா விவாகரத்து.

கடந்த 1995ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான்-சாய்ரா இருவரும் திருமணம் நடக்க இவர்களுக்கு கதீஜா, ரஹீமா, அமீன் என 3 பிள்ளைகள் இருக்கிறார்கள்.

இதில் கதீஜாவுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.

29 வருடங்கள் திருமணம் ஆகிய நிலையில் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சாய்ரா இருவரும் பிரிந்துவிட்டனர்.

இதுகுறித்து சாய்ரா ஒரு அறிக்கை வெளியிட, ரகுமான் தனது இன்ஸ்டாவில், 30ஐ அடைய விரும்பினோம்.

ஆனால் எதிர்பாராவிதமாக முடிவுக்கு வந்துவிட்டது. நொறுங்கிய இதயங்களால் கடவுளின் சிம்மாசனமே ஆடிவிடும். உடைந்தது மீண்டும் ஒன்று சேராது.

உங்களின் அன்புக்கும், இந்த நேரத்தில் எங்களின் பிரைவசியை மதிப்பதற்கும் நண்பர்களுக்கு நன்றி. #arrsairaabreakup என தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் பதிவிற்கு கதீஜா கை எழுப்பி கும்பிடுவது போல் பதிவு போட்டுள்ளார்.