படப்பிடிப்பிற்காக இலங்கை வந்துள்ள நடிகர் மோகன்லால், மம்முட்டி

0
24
Article Top Ad

பிரபல இந்திய திரைப்பட நடிகர் மோகன்லால் நேற்று (19) இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இலங்கை வந்த நடிகர் மோகன்லாலுக்கு ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த படத்துக்குத் தற்காலிகமாக ‘மெகாஸ்டார் 429’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த படத்தின் மூலம் மம்மூட்டி மற்றும் மோகன் லால் ஆகியோர் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இணையவுள்ளனர். கடைசியாக 2008 ஆம் ஆண்டு 20-20 என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த படத்துக்காக மம்மூட்டி 100 நாட்களும் மோகன்லால் 30 நாட்களும் திகதிகளை ஒதுக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் இளவயது டி ஏஜிங் காட்சிகள் நடைபெற உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஷூட்டிங் ஸ்பாட்டில் மம்மூட்டி, மோகன்லால் மற்றும் குஞ்சக்கா போபன் ஆகியோர் இருக்கும் புகைப்படம் வைரல் ஆகிவருகிறது.

மேலும் பிளாஷ்பேக் காட்சி ஒன்றுக்காக டி-ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. மலையாள சினிமாவின் இருபெரும் ஆளுமைகளாகக் கருதப்படும் நடிகர்கள் இணைந்து நடிக்க வேண்டும் என்கிற நீண்ட நாள் ஆசை நிறைவேறப்போவதாக இரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.