85,000 அகதி விண்ணப்பங்கள் நிலுவையில்.. கனடா எடுத்துள்ள புதிய தீர்மானம் என்ன?

0
54
Article Top Ad

 கனடாவில் புகலிட அகதி தஞ்சம் கோரி விண்ணப்பித்த 85,000ற்கும் அதிகமானவர்களின் கோப்புகள் 2024ம் ஆண்டு ஒக்டோபர் வரையில் நிலுவையில் உள்ளதாக IRCC தெரிவித்துள்ளது. நிலுவையிலுள்ளவர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து முடிப்பதற்காகவே Private Refugee Sponsorship திட்டத்தை இடைநிறுத்தியுள்ளதாக IRCC கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

ஐந்து அன்றேல் அதற்கு மேற்பட்ட தனிப்பட்ட நபர்கள் கூட்டாக இணைந்து அனுசரணை வழங்குவதன் மூலம் அன்றேல் சமூக அமைப்புக்கள் அனுசரணை வழங்குவதன் மூலம் கனடாவிற்கு அகதிகளை அழைக்கும் Private Refugee Sponsorship திட்டத்தை 2025ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி வரைக்கும் கனேடிய அரசாங்கம் இடைநிறுத்தி வைத்துள்ளது. இந்த அறிவிப்பை கனேடிய குடிவரவு அகதிகள் மற்றும் பிரஜாவுரிமைக்கு பொறுப்பான Immigration, Refugees and Citizenship Canada (IRCC) அமைப்பு அதன் இணையத்தளத்தில் பிரசுரித்துள்ளது.

செய்தி மூலம்

Canada is pausing private refugee sponsorship applications until 2026

ஆண்டு தோறும் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையானது தனிப்பட்டவர்களின் அகதி அனுசரணைக்கான எண்ணிக்கையை விடவும் மிக அதிக அளவில் இருப்பதாக அந்தக்குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2025ம்ஆண்டு தொடக்கும் 2027ம் ஆண்டு லரைக்குமான குடிவரவுத்திட்டத்தில் கனேடிய அரசாங்கம் தனிப்பட்டவர்களின் அகதி அனுசரணைத்திட்டத்திற்கு அமைவாக 23,000 அகதிகளை கனடாவிற்குள் அழைப்பதை இலக்காக் கொண்டிருந்தது. இதேவேளை 2025ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாகவே கனடாவில் 58,000 ற்கும் சற்று அதிகமானவர்களை அதிகளாக உள்வாங்க கனடா திட்டமிட்டிருந்தது.

கனடாவில் புகலிட அகதி தஞ்சம் கோரி விண்ணப்பித்த 85. 000ற்கும் அதிகமானவர்களின் கோப்புகள் 2024ம் ஆண்டு ஒக்டோபர் வரையில் நிலுவையில் உள்ளதாக IRCC தெரிவித்துள்ளது. நிலுவையிலுள்ளவர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து முடிப்பதற்காகவே திட்டத்தை இடைநிறுத்தியுள்ளதாக IRCC கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.